இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இந்த வசனம் பெரும்பாலும் அனலுமின்றி குளிருமின்றி இருக்கும் சபைக்கும் அதின் அங்கத்தினருக்கும் எழுதப்பட்டபோது, ​​​​மற்றவர்களை கிறிஸ்துவுக்குள்ளாய் அழைப்பவர்களால் மேற்கோள் காட்டப்படுவதும் என்னை எப்போதும் கவர்ந்த வசனமாகும் , இது தேவனுடனான அவர்களின் அன்பான உறவை மீண்டுமாய் தட்டி எழுப்புகிறது. விசுவாசிகளாக, நாம் கர்த்தராகிய இயேசுவை நம் இருதயங்களிலும், வாழ்க்கையிலும், சபைகளிலும் வாசம் செய்யும்படியாய் அழைக்க வேண்டும். அவர் அங்கு இல்லை என்பதல்ல, அவர் நம் அழைப்பிற்காக வாசற்படியிலே நின்று காத்திருக்கிறார் - அவர் உள்ளே பிரவேசிக்க மாட்டார். அவர் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால் மாத்திரமே , அவர்களிடத்தில் பிரவேசிப்பார். அவர் அழைக்கப்பட்ட இருதயங்களில் மட்டுமே அவர் வசிக்கிறார்!

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமுள்ள தேவனே , எனது இரட்சகரே, உமது பிரசன்னத்தையும் ஐக்கியத்தையும் என்னுடன் பகிர்ந்து கொள்ள நீர் விரும்புகிறீர் என்று நான் அறிவேன். ஒவ்வொரு முறையும் நான் சுவாசிக்கும் போது நீர் அருகில் இருப்பதை நான் உணருவேன். ஆனால் அநேக வேளைகளில் உம் பிரசன்னத்தை நான் உணராமலும் , போற்றாமலும் இருக்கிறேன் என்று ஒப்புக்கொள்கிறேன்.இன்று என் இருதயத்தில் வந்து, உம் பிரசன்னம் , ஆறுதல் மற்றும் வல்லமையால் என் வாழ்க்கையை நிரப்பவும் நான் உம்மிடம் கேட்டுக்கொள்கிறேன். என் வாழ்க்கையை உமக்காகவும்,உம்முடனும் வாழ வேண்டும் என்று நான் விரும்புகிறேன். பரிசுத்தமும் சர்வவல்லவருமான தேவனே , இயேசுவை என் ஆண்டவராகவும்,இரட்சகராகவும் வழங்கியதற்காக உமக்கு நன்றி. அவர் நாமத்திலே எனது ஸ்தோத்திரங்களையும், துதிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து