இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவன் சில வேளைகளில் நமக்குச் செவிசாய்க்காமல் தூரமாக இருப்பதாகத் தோன்றுகிறது. இஸ்ரவேல் பல நூறு ஆண்டுகளாக அடிமைத்தனத்தில் இருந்ததை நினைத்துப்பாருங்கள், தேவனின் வாக்குத்தத்தத்தின் மீட்பருக்காக ஜெபித்தார்கள். "தேவன் கேட்கவில்லையா?" அவர்கள் மீண்டும் மீண்டும் கேட்டு, பதிலளிக்காததைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். "தேவனே , ஏன் எங்களைக் கைவிட்டீர் ?" என்று வேதனையுடன் கேட்டார்கள். ஆனாலும், ஏற்ற நேரத்தில், தேவன் தம்முடைய நேச குமாரனை அனுப்பி, நித்திய மீட்பைக் கொண்டுவந்தார் (கலாத்தியர் 4:4). அதிர்ஷ்டவசமாக, காரியங்கள் நன்றாய் இல்லாதபோது கூட நன்றாய் இருக்கிறது என்று வேஷமாக வாழும்படி தேவன் நம்மைக் கேட்கவில்லை. அவர் இரட்சிப்பு மற்றும் உதவிக்கான வேண்டுதல்களினால் சங்கீத புஸ்தகத்தை நிரப்பியுள்ளார் . இன்றைக்கான வசனத்தில் உள்ள வார்த்தைகள் உங்களுக்கான வார்த்தையின் பகுதியாக கூட நீங்கள் உணரலாம் . என்றாலும் உங்களுக்கான உடனடி மற்றும் வல்லமையுள்ள தேவனுடைய மீட்புக்காக நம்முடைய ஆயிரக்கணக்கான வாசகர்கள் இன்று ஜெபிக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள் : கர்த்தாவே, நீர் இதைக் கண்டீர், மவுனமாயிராதேயும்; ஆண்டவரே எனக்குத் தூரமாகாதேயும். என் தேவனே, என் ஆண்டவரே எனக்கு நியாயஞ்செய்யவும் என் வழக்கைத் தீர்க்கவும் விழித்துக்கொண்டு எழுந்தருளும்

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள தேவனே , பரலோகத்தின் தேவதூதர்களுக்கு மத்தியில் உமது நாமம் போற்றப்படுவது போல் பூமியெங்கும் போற்றப்படுவதாக . எங்கள் நாளில் உம் ராஜ்யத்தின் வல்லமையையும், மகத்துவத்தையும் காண்பித்தருளும் . உம்முடைய சபையையும் உம் பிள்ளைகளையும் பொல்லாங்கனின் பிடியிலிருந்து மீட்டருளும் . ஆவிக்குரிய காரியங்கள் , குடும்பம்,சரீரம் அல்லது பொருளாதார பிரச்சனைகளில் உம் உதவியை எதிர் நோக்கியிருக்கும் உம்முடைய பிள்ளைகளுக்கு வேண்டிய விடுதலையைக் தாரும். எங்களின் வாழ்வு உமது மகிமைக்காக இப்போதும் எப்பொழுதும் சதாகாலங்களிலும் வாழட்டும். இயேசுவின் நல்ல நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து