இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

உம்முடைய சித்தம் பரலோகத்திலே செய்யப்படுவது போல பூமியிலும் செய்யப்படுவதாக" என்று இயேசு சொன்னார். கர்த்தர் பூமியின்மீதெங்கும் அங்கீகரிக்கப்பட்ட ராஜாவாக இருக்கும் நாளுக்காக ஜெபிக்கும்படி இயேசுவானவர் எங்களுக்குக் கற்றுக் கொடுத்தார். நாங்கள் அதை எதிர்நோக்குகிறோம், ஏனென்றால் எங்கள் விசுவாசம் மெய்யென்றும், கர்த்தராகிய ஆண்டவர் மாத்திரமே எப்படி மகிமைப்படவேண்டுமோ அப்படியாய் அவர் மகிமைப்படுவாறென்றும் அறிந்திருக்கிறோம்.இந்த பாவம் நிறைந்த உலகிலே, தேவனுடைய நாமம் நிந்திக்கப்படுகிற உலகிலே, ஒவ்வொரு முழங்கால்களும் முடங்கி,ஒவ்வொரு நாவும் அவர் ஒருவரே மெய் தேவனாகிய யாவே மாத்திரமல்ல, ஏனென்றால் அவர் எதிராளியாகிய பிசாசுடன் ஒப்பிடமுடியாதவர், அவருடைய நாமம் மாத்திரமே கனத்திற்கும் , பயத்திற்கும், புகழ்ச்சிக்கும் தகுதியானது என்று அறிக்கைப்பண்ணும் .

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள மகா தேவனே , என்னில் மட்டுமல்ல, உம்முடைய ஜனங்களிலும் , எங்கள் வரலாற்றிலும் உம்முடைய நாமத்தை மகிமைப்படுத்த கிரியை நடப்பியும் . உமது நாமம் பூமியெங்கும் பயத்தோடும் பக்தியோடும் போற்றப்பட வேண்டும் என்று முழு ஆத்துமாவோடும் முழு பெலத்தோடும் ஜெபிக்கிறேன் . உம்முடைய சொந்த ஜனங்கள் உம் நாமத்தை சொல்லிக் கூப்பிடவும், உம்முடைய கிருபையைப் போற்றவும் உமது மக்களுக்கு உதவ உம் அதிகாரத்தையும், மகத்துவத்தையும் காட்டும் வல்லமையான கிரியையை நடப்பியுங்கள் . இயேசுவின் பரிசுத்தமான மற்றும் விலையேறப்பெற்ற நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து