இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

உங்கள் வாழ்க்கையின் திசைகாட்டிக்கு நீங்கள் எந்த கருவியை பயன்படுத்துகிறீர்கள்? உங்களின் பரிசுத்ததிற்காக வழிகாட்டியின் கருவியாக {GPS}எதைப் பயன்படுத்துகிறீர்கள்? நாம் எவ்வளவு நுண்ணறிவுள்ளவர்களாகவோ, ஞானிகளாகவோ, அனுபவம் வாய்ந்தவர்களாகவோ அல்லது அறிவுள்ளவர்களாகவோ இருந்தாலும், தேவனால் மாத்திரமே நம் நடைகளை சரியாக வழிநடத்த முடியும். அதன் பின்னணியில் உள்ள காரணத்தை நாம் உடனடியாகப் பார்க்க முடியாவிட்டாலும், அவரையும் அவருடைய ஞானத்தையும் நம்பும்படி தேவன் நம்மைக் கேட்கிறார். நாம் செய்யும் எல்லாவற்றிலும் அவருடைய பிரசன்னம் , வழிகாட்டுதல் மற்றும் கிருபையை நாம் அங்கீகரிக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். அவருடைய பிரசன்னத்தை நாம் நம்பி ஒப்புக்கொள்ளும்போது, ​​நம்முடைய பாதைகள் மிகவும் நேரானவை என்பதையும், நாம் செல்லும் இடங்கள் மிகவும் உறுதியானவை என்பதையும் நாம் உணர ஆரம்பிக்கிறோம் .

என்னுடைய ஜெபம்

அப்பா பிதாவே , தயவு செய்து என் சுய புத்தியின் மேலும் ஆலோசனையின் மேலும் சாய்ந்து கொள்ளாத தைரியத்தை எனக்கு தாரும் . என்னுடைய ஞானம்,சிந்தனையில் தவறு இருக்கலாம் என்று எனக்குத் தெரியும். நான் அடிக்கடி என் உள்ளுணர்வால் செய்யப்படும் நன்மைக்காக என்ன நினைக்கிறேனோ அது என் முகத்தில் வீசக்கூடும் என்பதை நான் உணர்கிறேன். இன்றைய குழப்பமான உலகில் நான் உம் சித்தத்தை செய்து வாழ முற்படுகையில், தயவுக்கூர்ந்து உம் ஞானத்தையும் நுண்ணறிவையும் கொடுத்து என்னை ஆசீர்வதிக்கும்படி கேட்கிறேன் . இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தினாலே என் வாழ்க்கையில் உம் வழிகாட்டுதலையும் மாறாத சமூகத்தையும் கேட்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து